Namakkal City DMK Executive Meeting Rana.R.Ananth announcement

நாமக்கல் நகர திமுக பொறுப்பாளர் ராணா. ஆர். ஆனந்த் விடுத்துள்ள அறிவிப்பு:
நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல் நகர திமுக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 22.01.2019 செவ்வாய்கிழமை மதியம் 12.00 மணிக்கு நாமக்கல் திருச்சி சாலை, காவேரி நகர், மாவட்ட திமுக அலுவலகம், அன்னை அஞ்சுகம் முத்துவேலர் இல்லம், தளபதி அரங்கில் மாவட்டக் கழக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் தலைமையில் நடைபெற உள்ளது. அதில், வருகின்ற 25.01.2019 வெள்ளிக்கிழமை நாமக்கல், பூங்கா சாலையில் நடைபெறும் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை நடக்க உள்ளது.
அது சமயம் நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், நகர சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.