Namakkal City DMK tomorrow Parliamentary Consulting Meeting
நாமக்கல் கிழக்குமாவட்டம், நாமக்கல் நகரத்தின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் கிழக்குமாவட்டம்நாமக்கல் நகரத்தின் சார்பில்,நாடாளுமன்றதொகுதிஆலோசனைக்கூட்டம் நாளை ( 30ம் தேதி) வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு நாமக்கல், உழவர் சந்தைஅருகில் உள்ளகவின்கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட பொறுப்பாளரும், மத்தியமுன்னாள் இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்றதொகுதிபொறுப்பாளர்களான,முன்னாள் அமைச்சரும், கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு துணைத் தலைவருமான பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏபார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்திற்கு நகரத்திற்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு,பொதுக்குழுஉறுப்பினர்கள்,முன்னாள் எம்எல்ஏகள், நகர வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வாக்குசாவடி ஏஜென்ட்டுகள் மற்றும் கட்சியின் முன்னோடிகள்அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.