Namakkal District Athletic Competition Kamarajar School Champion Champion

நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவி தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

பள்ளிகளுக்கான விளையாட்டு மேம்பாட்டு மையம் (எஸ்எஸ்பிஎப்) மற்றும் மாவட்ட தடகள விளையாட்டு கவுன்சில் இணைந்து நடத்திய அதெலடிக் சாம்பின் போட்டிகள் நாமக்கல் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட அளவில் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான இப்போட்டியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். காமராஜர் கல்வி நிறுவனங்களின் தலைவரும், நாமக்கல் மாவட்ட எஸ்எஸ்பிஎப் தலைவருமான நல்லதம்பி துவக்க விழாவுக்கு தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

கல்வி நிறுவன செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். மாவட்ட எஸ்எஸ்பிஎப் செயலாளர் வெங்கடாஜலபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். போட்டிகளில் தனி நபர் சேம்பியன்ஷிப் பட்டத்தை காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா வென்றார்.

முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர். நிறைவு விழாவில் தேசிய தடகள வீரரும் தமிழ்நாடு எஸ்எஸ்பிஎப் செயலாளருமான அன்னாவி, நாமக்கல் மாவட்ட எஸ்எஸ்பிஎப் சேர்மன் ரவி, துணைத் தலைவர்கள் அருண்குமார், வெற்றிச்செல்வன், பிரபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரிய கருப்பன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து சென்ற ஆண்டு தேசிய அளவில் சட்டீஸ்கரில் நடைபெற்ற சாய்வாங்டோ போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பரத், வென்கலப்பதக்கம் பெற்ற காவ்யா ஆகியோருக்கு அரசு வழங்கிய ஊக்கத்தொகை முறையே ரூபாய்.1,50,000 மற்றும் ரூ.1,00,000-க்கான காசோலையை பள்ளித் தலைவர் நல்லதம்பி வழங்கி பாராட்டினார். மாவட்ட பொருளாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை துணை செயலாளர்கள் மாயக்கண்ணன், கார்த்திக், உடற்கல்வி இயக்குநர்கள் யுவராஜ், கமலஹாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!