Namakkal District Collector asiamariyam sudden inspection of the ration shops
நாமக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் அருகே முதலைப்பட்டி ரேசன் கடையை மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொருட்களின் மொத்த இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விவரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் சோதனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பொம்மைகுட்டைமேடு, தாழம்பாடி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை ஆகியே ரேசன் கடைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா, விற்பனையாளர் சரியாக வருகிறாரா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்போது, ரேசன் கார்டுகளுக்கு பொருட்களை தரமாகவும், எடையளவு குறையாமலும் வழங்க வேண்டுமென விற்பனையாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, மாவட்ட வழங்கல் அலுவலர் பர்ஹத் பேகம், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் சந்திரமாதவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.