Namakkal district redressal camp for Ration Card Holders : 7 going places Tomorrow

model


நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் தாலுக்காக்கள் தோறும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தாலுக்கா தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்கள் நாளை 9ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 7 தாலுக்காவில் நடைபெறுகிறது.

குறைதீர் முகாம் நடைபெற உள்ள ரேசன் கடைகளின் விபரம்: நாமக்கல் தாலுக்காக என்சிஎம்எஸ் 8ம் எண் ரேசன் கடை, சேந்தமங்கல் தாலுக்கா திருமலைகிரி ரேசன் கடை, ராசிபுரம் தாலுக்கா நாச்சிப்பட்டி ரேசன்கடை, கொல்லிமலை தாலுக்கா வாசலூர்ப்பட்டி ரேசன்கடை,

திருச்செங்கோடு தாலுக்கா வரப்பாளையம் ரேசன் கடை, குமாரபாளையம் தாலுக்கா குமாரபாளையம் சுந்தரம் காலனி ரேசன்கடை, பரமத்தி வேலூர் தாலுக்கா செல்லப்பம்பாளையம் ரேசன் கடை ஆகிய 7 கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் முகாம் நடைபெறும்.

இதில் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் தங்களது ஸ்மார்ட் ரேசன் கார்டு தொடர்பான திருத்தம் மற்றும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம்.

மேலும், ரேசன் பொருட்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!