Namakkal DMDK Southern District Administrators Consultative Meeting
நாமக்கல் தெற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விஜயன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
கட்சியின் மாநில அவைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி குறித்து ஒவ்வொரு பகுதி நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு வார்டு மற்றும் கிராமம் தோறும் பொதுமக்களை சந்தித்து கட்சின் உறுப்பினராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட அவை தலைவர் சீனிவாசன், பொருளாளர் சத்தியா, துணை செயலாளர்கள் சிவா, செல்வி, செயற்குழு உறுப்பினர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், கதிரேசன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நாமக்கல் நகர செயலாளர் அம்மன் வெங்கடாசலம் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.