Namakkal Eastern District DMK on Parliamentary Consultation Meeting
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், ஒன்றிய,பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் நடத்தப்படும் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக்கூட்டம் எனது தலைமையில்,நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களான, முன்னாள் அமைச்சரும்,கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏவும் கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளருமான பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
இன்று (20ம் தேதி )வியாழக்கிழமை காலை 7 மணி முதல் புதுச்சத்திரம் வடக்குஒன்றியத்தில் ஒன்றிய பொறுப்பாளர் கவுதம் ஒன்றிய பொறுப்பாளர் ஏற்பாட்டிலும், 21ம் தேதி வெள்ளிகிழமை காலை 7 மணி முதல் புதுச்சத்திரம் தெற்குஒன்றியம் பொறுப்பாளர் துரை ஏற்பாட்டிலும், 22ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி செயலாளர் நடேசன் ஏற்பாட்டிலும், மதியம் 3 மணி முதல் சேந்தமங்கலம் பேரூராட்சி செயலாளர் தனபாலன் ஏற்பாட்டிலும், 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஏற்பாட்டிலும் நடைபெறுகிறது.
கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் மற்றும் கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, ஊராட்சி மற்றும் வார்டுகளில் நடைபெறும் கூட்டத்திற்கு அந்தந்த பகுதி மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏகள், ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள்மற்றும் கட்சி முன்னோடிகள்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.