Namakkal, Government College, Youth Red Cross Society, relieves Gaja storm relief
நாமக்கல் அரசு கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லக்ஷரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் பெரியார் பல்கலைக் கழக செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அடுத்த வாரத்தில் நாகை மாவட்டத்தில் புயல் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையலுக்கு தேவையான கோதுமை மாவு, ரவை, மைதா,சர்க்கரை மற்றும் சோப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பெரியார் பல்கலை கழக செஞ்சிலுவை சங்கத்திற்கு கல்லூரி சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொ) வசந்தாமணி, கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி, பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.