Namakkal in favor of the world to mark the dates of 6,7 offset Guru Maha Guru yagapuja
குருபெயர்ச்சியை முன்னிட்டு உலக நண்மைக்காக வருகிற 6,7 தேதிகளில் நாமக்கல்லில் சிறப்பு குருபெயர்ச்சி யாகபூஜைகள் நடைபெறுகிறது. பிரசித்திபெற்ற சங்கரய்யர் பூஜைகளை நடத்துகிறார்.
நாமக்கல் துறையூர் ரோட்டில் சித்திவிநாயகர் சன்னிதானம் உள்ளது. இங்கு பூஜ்யஸ்ரீ சங்கரய்யர் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகிறார். மறைந்த பிரதமர் சந்திரசேகர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பிரபல அரசியல் பிரமுகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஜோதிட ரீதியான ஆலோசனைகள் வழங்குவதில் பிரசித்திபெற்றவர் சங்கரய்யர்.
குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு வருகிற 6 மற்றும் 7ம் தேதிகளில் சித்திவிநாயகர் சன்னிதானம் சார்பில் நாமக்கல் எஸ்பிஎஸ் திருமண மண்டபத்தில் உலக நண்மை வேண்டி சிறப்பு மகா யாகபூஜைகள் நடைபெறுகிறது, 6ம் தேதி சனிக்கிழமை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெறும். 9 மணிக்கு ஸ்ரீ குரு மகா யாகம் நடைபெறும். யாகம் முடிவில் பூர்ணாஹூதி நிறைவு பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
குரு யாக பூஜைகளை முன்னின்று நடத்தும் பூஜ்யஸ்ரீ சங்கரய்யர் மாலை 4.15 மணிக்கு குரு பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கி கூறி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார். பக்தர்கள் பூஜைகளில் கலந்துகொள்ள அனுமதி இலவசம், விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சித்திவிநாயகர் சன்னிதானம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.