Namakkal Kamaraj Matriculation School achieved 100% pass percentage in SSLC
நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து இந்த ஆண்டு 10ம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி மதுபாலா 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி ஜீவிதா 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். மாணவி பிரித்தா மற்றும் மாணவர் விஷால் ஆகிய இருவரும் 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 5 பேரும், சமூக அறிவியலில் 2 பேரும், கணிதத்தில்ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 293 மாணவர்களில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 485க்கு மேல் 9 பேரும், 480க்கு மேல் 23 பேரும், 450க்கு மேல் 95 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தலைவர் கரையாம்புதூர் நல்லதம்பி, செயலாளர் சதாசிவம் மற்றும் இயக்குனர்கள் பாராட்டினார்கள்.