Namakkal MLA Block Development Fund Projects for Rs 15 lakh: Ministers have initiated.
நாமக்கல் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சதிற்கான திட்டப்பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் புதிதாக வழங்கப்பட்டுள்ள ரத்தத்தை பாதுகாப்பாக வைக்க ரூ. 5 லட்சத்தில் பிரிட்ஜ் துவக்கவிழா மற்றும் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.10 லட்சத்தில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பங்கேற்று திட்டப்பணிகளை துவக்கிவைத்தனர்.
நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள பிரிட்ஜில் 180 ரத்தம் சேகரிக்ப்பட்ட பேக் வைக்கலாம். மேலும் இந்த பிரிட்ஜில் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக செல்போனிற்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். இதனால் வெப்பநிலை மாற்றத்தை சீர் செய்யமுடியும் என மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த விழாவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நாமக்கல் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சேகர்,நாமக்கல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ராஜா, முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வடிவேல், சாதிக் பாட்சா, ராஜா, லியாகத் அலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டன