Namakkal – Mohanur Salem Co-operative Sugar Plant 2018-19 Sugarcane Milling Workshop

மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-19ம் ஆண்டு கரும்பு அரவை துவங்கியது. 1.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர், சேலம் கூட்டுறவு சா;க்கரை ஆலை 2018-19 ம் ஆண்டு கரும்பு அரவை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல்எம்எல்ஏபாஸ்கர்முன்னிலை வகித்தார்.

மாவட்டகலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து 2018-19 ம் ஆண்டிற்கான கரும்பு அரவையினை துவக்கி வைத்து பேசியதாவது:

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2018-19ம் ஆண்டு கரும்பு அரவை துவங்கப்பட்டுள்ளது. இந்த அரவைப் பருவத்தில் சுமார் 1.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆயிரத்து 529 ஏக்கர் நடவு கரும்பும், 952 ஏக்கர் கட்டைக் கரும்பும் என மொத்தம் 2 ஆயிரத்து 481 ஏக்கர் இவ்வாலைப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள உபரிக் கரும்புகளையும் எடுத்து அரவை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-18 ம் கரும்பு பருவத்தில் கடும் வறட்சியின் காரணமாக இவ்வாலை 0.53 லட்சம் டன்கள் கரும்பு மட்டுமே அரவை செய்தது. ஆலை அரவைக்கு அனுப்பப்படும் கரும்பிற்கான கிரயத்தொகை கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி கரும்பு வெட்டி அனுப்பிய 14வது நாள் அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். எனவே அங்கத்தினர் பெருமக்கள் அனைவரும் ஆலையின் முழு அரவைத் திறனுக்கும் தேவையான கரும்பினை ஆலைக்கு பதிவு செய்து ஆலையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கி ஆலையும் அதன் மூலம் அங்கத்தினர்களும் பயன்பெற வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர் நவநீதன், அலுவலக மேலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!