Namakkal – occupy land in Kollimalai forest, Rs 3 per person 60 thousand fine
நாமக்கல் : கொல்லிமலை வனப்பகுதியில் நிலம் ஆக்கிரமிப்பு செய்த 3 பேருக்கு வனத்துறையினர் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டூர் நாடு வனப் பகுதி காப்புக் காட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக, நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கொல்லிமலை வனச் சரகர் அறிவழகனுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வன அலுவலர் உத்திரவின்படிகொல்லிமலை வனச் சரகர் தலைமையில் வனவர் திருச்செந்தூரன், வனக் காப்பாளர்கள் கோதண்டராமன், மணிவண்ணன் வனக்காவலர் அங்கப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் குண்டூர் நாட்டில் உள்ள வனத் துறை காப்புக்காட்டில் ஆய்வு செய்தனர்.
அப்போது காப்புக்காட்டில் சிலர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது. அங்கு ஆக்கிரமிப்பு செய்ததாக பலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அல்லிராஜ் (25), மணிகண்டன் (30), செல்வராஜ் (37) ஆகிய 3 பேரைப் பிடித்து நபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.