Namakkal public school teachers to teach students to practice the method of maintaining physical health
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி (இடைநிலை) சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் மாணியருக்கு ஒருங்கிணைந்த கல்வி (இடைநிலை) மூலம் சுகாதாரம் மற்றும் சரிவிகித உணவு குறித்து கற்பிக்கப்பட உள்ளது. இதற்கான சி ஒரு நாள் பயிற்சி நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். வள்ளி தலைமை வகித்தார். கருத்தாளர்கள் வி. பிரேமா, ஆர். ஜூலியன் , பி. வசந்தி ஆகியோர் பங்கேற்று ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்தனர். இதன்படி மாணவியர் சுகாதாரம் பேண வேண்டிய முறை, உடல் நலம் பேண எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு ஆகியவை கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். வள்ளி மனோகரன் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் 157 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் மாணவியர் மட்டும் பயிலும் பள்ளி மற்றும் மாணவ, மாணவியர் பயிலும் பள்ளிகள் 140 உள்ளன.
இவற்றில் தலா 2 ஆசிரியைகள் வீதம் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு நாமக்கல்லிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கு குமாரபாளையத்தில் இன்று பயிற்சி அளிக்கப்பபட்டது. மாணவியர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயில இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் ஆசிரியைகள் பள்ளிகளில் உள்ள மாணவியருக்கு கற்பிக்க வேண்டும், என்றார்.