Namakkal: Request to register sugar cane for Mohanur cooperative sugar factory
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டுக்கான அறவைப்பருவம் வரும் 24ம் தேதி துவங்க உள்ளது. இந்த நிலையில் இதுவரை கரும்பை ஆலைக்கு பதிவு செய்யாத சங்க உறுப்பினர்கள் தங்கள் கரும்பை ஆலைக்குப் பதிவு செய்ய பயன் பெறலாம்.
இது சம்மந்தமாக விபரம் பெற வேண்டுவோர் ஆலையின் மேலாண்மை இயக்குநர்(பொறுப்பு), கரும்பு பெருக்கு அலுவலர் மற்றும் கோட்டத்தைச் சேர்ந்த கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய செல்போன்கள் விபரம்:
ஆலை மேலாண்மை இயக்குநர்(பொறுப்பு) ஜெய்னுலாபுதின் 9443243324, கரும்பு பெருக்கு அலுவலர் நவநீதன் 9489900202, கரும்பு அலுவலர்கள் மோகனூர் கிழக்கு சீதாலட்சுமி 9489900213, மோகனூர் மேற்கு கந்தசாமி 9489900214, பாலப்பட்டி கலாவதி 9489900218, பரமத்திவேலூர் மணிவேல் 9489900215, நாமக்கல் குருமூர்த்தி 9489900211, ராசிபுரம் மற்றும் ஆத்தூர் சுப்புராஜ் 9489900267, தொட்டியம் வீரத்தமிழன் 9489900217, என தெரிவித்துள்ளார்.