Namakkal road blockade to protest the arrest of Stalin in the sudden arrest of the DMK party
நாமக்கல் : சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மதுராந்தகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் பார்இளங்கோவன் தலைமை வகித்தார். திமுக நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஷேக்நவீத், நகர செயலாளர் குப்புசாமி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் கவிராஜ், சிவசங்கர், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மணிமாறன், தலைவர் கண்ணன், மகளிரணி சித்ரா, பேபி, சுதா, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் நீலவானத்து நிலவன், மாவட்ட பொறுப்பாளர் ஆதிதமிழன்,
திமுக ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், ராமசாமி, கவுதம், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், மாநில சட்டதிட்ட திருத்தக்குழு நக்கீரன், சேந்தமங்கலம் பேரூராட்சி செயலாளர் தனபால், திமுக தலைமை பேச்சாளர் ராசகோபால், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காந்தி,
மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மோகன், மார்டீன் கிறிஸ்டோபர், பிரபு, நகர மகளிரணி பிருந்தா, சரோஜா, பூங்கொடி, லட்சுமி, வழக்கீல் வடிவேல், நவீன், மணிக்குமார்,
நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஈஸ்வரன், மூர்த்தி, ரவிச்சந்திரன்,செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.