Namakkal – Senthamangalam Sri Lakshmi Narayana Perumal Temple Opening Balayam

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் பாலாலயம் திறப்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்துகொண்டார்.
சேந்தமங்கலத்தில் புரான சிறப்புப் பெற்ற லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை திருப்பணி செய்து கும்பாபிசேகம் செய்ய சேந்தமங்கலம் எம்எல்ஏ முயற்சி எடுத்து தமிழக அரசிடம் அனுமதி பெற்று முதல் கட்டமாக ரூ.70 லட்சம் நிதியை ஒதுக்கீடு பெற்றார்.
கடந்த 4 மாதங்களாக இக்கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் உட்புற மற்றும் வெளிப்புற ராஜகோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து கோவில் உட்புறத்தில் வீற்றிருந்த நைனாமலை வரதராஜப் பெருமாள் மற்றும் லட்சுமி நாராயணப் பெருமாள் கருவறையில் இருந்து சுவாமி சிலைகள் வெளியே எடுக்கப்பட்டு பாலாலயம் அமைத்து அதில் சிலைகளை வைக்கும் பணி நடைபெற்றது. 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு இப்பணி நிறைவுற்றது.
இøத்தொடர்ந்து இக்கருவறைகளில் திருப்பணிகள் நடைபெறும். கோவில் பாலாலயம் திறப்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்துகொண்டு கோவில் திருப்பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைவுபடுத்தி விரைவில் கும்பாபிசேகம் நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணன், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் மின்னாம்பள்ளி நடேசன், பேரூராட்சி அதிமுக செயலாளர் ராஜேந்திரன், டாக்டர் கருணாநிதி, குமரேசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.