Namakkal – Sivaandipatti village Mariamman Pidariyamman Temple Cars Festivals
செவ்வந்திப்பட்டி கிராமம் மாரியம்மன் மற்றும் பிடாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம் செவ்வந்திப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் மற்றும் பிடாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் ஆண்டு தோறும் திருத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு திருத்தேர் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி காவிரியில் தீர்த்தக்ம் கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதைனதொடர்ந்து வரும் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு திருத்தேர் தலையலங்காரம் நடைபெறுகிறது.
6ம் தேதி புதன்கிழமை காலை பிடாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் எல்லைக்காவல் ( தேர் ஒற்றை கல்லில் நின்று எல்லை உடைத்தல்) நடைபெறுகிறது. 7ம் தேதி வியாழக்கிழமை இரவு சிறப்பு வாணவேடிக்கை நடைபெறுகிறது.
8ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீராடுதல் மற்றும் திருத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செவ்வந்திப்பட்டி ஊர்பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.