Namakkal stamp blacksmithing in the labor field is empty, select the day after tomorrow
முத்திரைக் கொல்லர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நாளை (2ம் தேதி) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் நாளை (2ம் தேதி) நடைபெறவுள்ளது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்வர்களுக்கு சேலம், ஜங்ஷன் ரோடு, சோனா கல்லூரியிலும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வர்களுக்கு சேலம் கோட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு நடைபெறுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுச்சீட்டு ஏற்கெனவே அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறாத நபர்கள் தேர்வு நாளன்று ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு மையத்துக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.