Namakkal Urban Congress Committee on behalf of Nehru Memorial Day
நாமக்கல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் பங்கேற்று நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள நேரு பூங்காவில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்திக் , முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், வீரப்பன்,மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மாணிக்கம், நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் செல்வம், நகர செயலாளர் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் சோடா ராஜேந்திரன், சதீஸ்கண்ணன், டாக்டர் பாலாஜி,ஏகாம்பரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.