Namakkal was stopped in front of the house, car, motorcycle, fire damage
நாமக்கல்லில் வீட்டில் நிறுத்தி இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் இ.பி.காலனி, ராம்நகரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் நைஜீரியா நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(49), மகள் வனிதாவுடன் நாமக்கல்லில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டின் முன்புறம் இருந்த போர்ட்டிகோவில் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணியளவில் காரின் டயர் திடீரென்று வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார். அப்போது கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
உடனடியாக அவர் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது.
இதேபோல், வீட்டின் முன்புற ஜன்னல், கதவு உள்ளிட்டவையும் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.