Namakkal Yoga Class

நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் போதுப்பட்டியில் கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா இன்று நடைபெறுகிறது.

உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நாமக்கல் அருகே உள்ள போதுப்பட்டி கிராமத்தில் கிராமிய சேவைத்திட்ட துவக்க விழா வரும் நாளை (16ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணிக்கு நடைபெறுகிறது. போதுப்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நடைபெறும் விழாவிற்கு மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மணி தலைமை வகிக்கிறார். உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் மயிலானந்தன் திட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகிறார்.

கிராமிய சேவைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மனவளக்கலை யோகப் பயிற்சி ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக்கொள்ள உதவுகிறது. உடல், மன, குணநலம் பெற பெரிதும் பயன்படுகிறது. கிராம மக்கள் இப்பயிற்சியால் தங்களது கிராமத்தை அமைதியான கிராமமாகவும், பல்வேறு வளர்ச்சிகளும், வளங்களும் நிறைந்த கிராமமாக உருவாக்க முடியும்.பெரியபட்டி கிராம மக்களுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்து குணமளிக்க உதவும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். கிராமத்தை பசுமையாகவும், சுகாதாராமாகவும் வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மன்ற அறக்கட்டளை தலைவர் ராமு தெரிவித்தார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!