narikuravasபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நரிக்குறவர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்திடவும், அந்நலவாரியத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதன்படி, நரிக்க்குறவர் நல வாரிய உறுப்பினர்களின் மகன் அல்லது மகளுக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவியருக்கு ரூ.500-, 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகள், 10-ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 11-ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைக்கு தலா ரூ.1,000- கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். 12-ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகள், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முறையான பட்டப் படிப்புக்கு தலா ரூ.1,500- கல்வி உதவித்தொகையும், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப்படிப்பிற்கு ரூ.1,750- கல்வி உதவித் தொகையும், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ4,000, மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.5,000-, தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ4,000-, மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி படிப்புக்கு ரூ.6,000ஃ-; கல்வி உதவி தொகையாக வழங்கப்படும்.

மேலும் நாpக்குறவா; நல வாhpய உறுப்பினா;களின் மகன் அல்லது மகளுக்கு தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.6,000ஃ-ம் கல்வி உதவித்தொகையும், மாணவா; இல்ல வசதியுடன் கூடிய தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு பயில்பவருக்கு ரூ.8,000ஃ-, ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு ரூ.1,000ஃ-, மாணவா; இல்ல வசதியுடன் கூடிய ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்பிற்கு ரூ.1,200ஃ-ம்; கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

திருமண உதவித்தொகையாக ரூ.2,000, மகப்பேறு காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000- வீதம் ஆறு மாதங்களுக்கு ரூ.6,000, கருச்சிதைவு, கருக்கலைப்பு நேர்ந்தால் ரூ.3,000-, மூக்கு கண்ணாடி செலவு தொகையை ஈடு செய்ய ரூ.500 , முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1,000-ம் வழங்கப்படுகிறது.

நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,00,000, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10,000- முதல் ரூ.1,00,000- வரையிலும், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.15,000, ஈமச் சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2,000- வழங்கப்படும்.

தனிநபர் தொழில் தொடங்க முழு மானியமாக ரூ,7,500- ம், குழுவாக தொழில் தொடங்க (தனிநபருக்கு ரூ,10,000- அல்லது ரூ. 1,25,000- அதிகபட்சமாக குழுவிற்கு). குறைந்தப்பட்சம் ரூ.10,000- முதல் அதிகபட்சமாக ரூ.1,25,000- வரை மானியமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகி, மேற்கண்ட நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அதனை பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!