National Citizenship Amendment Seminar on behalf of the TMEK Association, Perambalur

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட விளக்க கருத்தரங்கம் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் அகவி தலைமை வகித்தார். கருத்தரங்கை மக்களுக்கான மருத்துவ கழக மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேசிய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினார்.

கருத்தரங்கில் கவிஞர் எட்வின், மாவட்ட குழு உறுப்பினர் செல்வபாண்டியன் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன், திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் தாமோதரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சட்ட ஆலோசகர் காமராசு , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஷர்புதீன், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் முகமது ரபிக், விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட செயலாளர் காப்பியன் உட்பட பலர் பேசினர்.

முன்னதாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட துணைத்தலைவர் ராமர் தொகுத்து வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!