National Girl Child Day Poster Release on behalf of the Government
பெரம்பலூர்: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், காணாமல் போகும் குழந்தைகளை மீட்டல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளை (24.1.2017) தேசிய பெண் குழந்தைகள் தினமான அனுசரிக்கப்படுவதையொட்டி பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான சுவரொட்டியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளரும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் தலைவருமான நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(23.1.2017) வெளியிட மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
இந்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் குழந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.