தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி 29.01.2016 முதல் 02.02.2016 வரை கேரள மாநிலம் கோலிகோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியை சேர்ந்த புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என். நாகப்பிரியா தேசிய அளவில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்று நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் மேலும், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.