National level tennis tournament; Students of Perambalur Golden Gates Vidyashram won silver medal
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மாணவர்கள் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று கோல்டன் கேட்ஸ் சீனியர் செகண்டரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
ஹரியானா மாநிலம், யமுனாநகரில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி, டெல்லி பப்ளிக் பள்ளியில் கடந்த நவ. 9 முதல் 13ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல மாநிலங்களும் மற்றும் துபாய், குவைத், கத்தார், அரேபியா, அபுதாபி போன்ற நாடுகளும் கலந்து கொண்டன.
இதில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் விஜய், சூர்யா, ரித்திக்ராஜ், ஷக்திராம் ஆகியோர் இறுதிப் போட்டி வரை சென்றனர். இதில் ஹரியானா லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியை எதிர்கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர் .வெற்றி பெற்ற மாணவர்களையும் , பயிற்சியாளர் பாப்சிகரன் ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன் , செயலாளர் அங்கயற்கண்ணி, முதல்வர் பவித் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
படவிளக்கம்:
ஹரியானா மாநிலம், யமுனாநகரில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் மாணவர்கள் வெள்ளி பதக்கம் வென்றதையடுத்து பள்ளி தாளாளர் ரவிசந்திரன், செயலாளர் அங்கயற்கண்ணி, முதல்வர் பவித் ஆகியோர் மாணவர்களையும், பயிற்யாளர் பாப்சிகரனையும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்த போது எடுத்தப்படம்.