National Rural Employment Scheme to offer a Salary of Rs 400 V.T.S conference resolution at perambalur

பெரம்பலூர்: அகில விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட 2வது மாநாடு பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவலகம் டி.முருகேசன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வி.காமராஜ் தலைமை வகித்தார். குன்னம் ஒன்றியக்குழு உறுப்பினர் இளையபெருமாள் சங்க கொடியேற்றினார்.
வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்டக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

விவசாய சங்கம் என்.செல்லதுரை, சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, மாதர் சங்கம் எ.கலையரசி, மின்ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.அகஸ்டின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வி.தொ.ச.மாநில செயலாளர் எ.பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் நிறைவுரை ஆற்றினார்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், நாள் ஒன்றுக்கு கூலி 400 ரூபாயும் இத்திட்டத்தை பேரூராட்சிக்கும் விரிவுபடுத்தி அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அப்படி வழங்காத பட்சத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர், வேப்பூர் யூனியன் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது,

தழுதாழை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானகடை செயல்படுவதால் அதை அகற்றக் கோரி மே.21.அன்று முற்றுகைப்போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் கே.காசிராஜன் தலைவராகவும், பி.ரமேஷ் செயலாளராகவும், வி.காமராஜ் பொருளாளராகவும் 11 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழு வீரசிங்கம் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!