National Sports Schools Competition: Winning students congratulate the collector
இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் நடத்திய 63 வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள் ஹரியானா மாநிலத்தில் டிசம்பர் 12 முதல் 18 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழக அணி சார்பாக பெரம்பலூர் விளையாட்டு விடுதி 3 தடகள மாணவிகள் தமிழ்நாடு அணி சார்பாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் 19 வயதிற்குட்பட்ட மும்முறைதாண்டுதல் போட்டியில் பிரிவில் என். நாகபிரியா வெண்கல பதக்கமும், கே.பவானி 400மீ தடைதாண்டுதல் போட்டியில் ஆறாமிடமும், ஆர்.கிருத்திகா, 1500மீ ஓட்டப்போட்டியில் ஆறாமிடமும்; பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற நாகபிரியாவிற்கு தமிழக அரசு சார்பாக ரூ.1,00,000-பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநில அளவிலான ரிலையன்ஸ் பவுண்டேசன் இளையோர் தடகள போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜனவரி 08 முதல் 09-ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி தடகள வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனா;. இதில் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 400மீ ஓட்டப்போட்டியில் ஆரோக்கிய எபெசிய டெல்ஸி முதலிடமும், ஆர். சங்கீதா நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் – மும்முறை தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும், தன்யா, சிவஸ்ரீ, சங்கீதா, டெல்ஸி ஆகியோர் 400மீ தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும்,
19 வயதிற்குட்பட்ட பிரிவில் மும்முறைதாண்டுதல் போட்டியில் என்.நாகபிரியா தங்கப்பதக்கமும் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கமும், ஆர்.கிருத்திகா 800மீ ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கமும் மற்றும் 1500மீ ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கமும், கே.பவானி 400 மீ மற்றும் 800 மீ ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். மேலும், முதலிடம் பெற்ற வீராங்கனைகள் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேற்கண்ட போட்டிகளில் வெற்றிபெற்று பதக்கம் வென்றுள்ள மாணவிகள் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மாவட்ட ஆட்சியரகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், தேசிய அளவிலும், மாநில அளவிலுமான போட்டிகளில் வெற்றிபெற்று நமது நாட்டிற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்,
மேலும், பல்வேறு சாதனைகளை படைக்க உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது விளையாட்டு மற்றும் வளர்ச்சி துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.