National Women’s Day Celebrate at Almighty Vidyalaya Public School near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் தேசிய மகளிர் தினவிழா மற்றும் மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை நடைபெற்றது. பள்ளியின் தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார்கணேசன் அனைவரையும் வரவேற்றார். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் து.ஆரோக்கிய பிரகாசம், காவல் ஆய்வாளர் ரஞ்சனா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் மாதாந்திர பத்திரிக்கையினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் துணைத் தலைவர் மோகனசுந்தரம், முதல்வர்கள் ஹேமா, சாரதா செந்தில்குமார், சந்திரோதயம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விசாகா குழு பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் காவல் ஆய்வாளர் ரஞ்சனா மகளிர் தின உரையாற்றினார். கூடுதல் கண்காணிப்பாளர் து.ஆரோக்கியபிரகாசம் பேசும் போது, குழந்தைகள் இளம் வயதிலிருந்தே மாதா, பிதா, குரு, தெய்வம் என தாய் தந்தைகளை மதித்து வணங்கி அதற்கடுத்து ஆசிரியர் மூலம் கல்வி கற்று வருவதோடு வாழ்க்கை கல்வி எனும் பொதுவான அனுபவத்தை வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பேசினார்.