Near in Perambalur, 60-foot-deep well at the two fallen fire fighters to safely rescue

fire-service-res பெரம்பலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றினுள் தவறி விழுந்தவரை வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு எடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பரவாய் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமக்கண்ணு (வயது 45). அதே இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழத்தில் உள்ள கிணற்று தண்ணீரை தினமும் தனது வயலுக்கு சென்று இரைத்து வருவது ராமக்கண்ணுவிற்கு வழக்கம். அதே போல் இன்று காலை வயலுக்கு இரைப்பதற்காக தனது அக்கா மகன் ராஜேஸ்வரன் உடன் சென்றுள்ளனர்.

மோட்டார் பம்பில் குப்பைகள் சேர்ந்துள்ளது. அவற்றை அகற்றி கிணற்றையும் சுத்தம் செய்வதற்காக 60 அடி ஆழ கிணற்றில் இறங்கியுள்ளார் ராம்கண்ணு அப்போது நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவரை தெடர்ந்து அவரை காப்பாற்றுவதற்காக அக்கா மகன் ராஜேஸ்வரனும் கிணற்றில் குதித்தார். ஆனால் இருவராலும் மேலே ஏற முடியாமல் தவித்துள்ளனர்.

கிணற்றில் விழுந்ததில் ராமக்கண்ணுக்கு காயங்கள் ஏற்பட்டது இருவரும் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயல்காரர்கள் உடனடியாக அவர்களை மீட்க வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் (பொறுப்பு) பழனிதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கரிகாழன், ராஜ்குமார், சிவகுரு, திருநாவுகரசு, ஆகியோர் விரைந்து வந்து கிணற்றுகுள் இருந்தவர்களை கீழே இருந்த ராமக்கண்ணு மற்றும் ராஜேஸ்வரனை பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர்களை சிகிச்சைக்காக வேப்பூர் வட்டார அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!