Near Perambalur, 4 vehicles collided in an accident, 2 people were killed: 30 people were seriously injured!

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இருந்து கொடைக்கானலை நோக்கி கார் ஒன்றில் சென்னை கொரட்டூர் சீனிவாசன் தெருவைச் சேர்ந்த கோபிநாத் மகன் பிரவீன் (30). கார் டிரைவர். இவரது ககோதரர் பிரகாஷ் (30), கெவின் (28), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (30) ஆகிய 4 பேரும் சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீன் ஓட்டி வந்தார். கார் சுமார் நள்ளிரவு 2.30 மணியளவில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே துறைமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னே சென்றுக் கொண்டிருந்த பைக் மீது எதிர்பாராவிதமாக மோதி, நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி, எதிர்திசையில், மதுரையில் இருந்து சென்னை சென்றுக் கொண்டிருந்த கார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், குஜ்ஜியலம்பாறையில் இருந்து மேல்மருவத்தூருக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் வேன் மீது மோதியது. இதில் கார் டிரைவர் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதே போல பைக்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து, திருச்சி மாவட்டத்திற்கு சென்ற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தொண்டைமாந்துறை மண்ஒட்டர் தெருவை சேர்ந்த சகாதேவன் மகன் சிவா (17), மற்றும் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராபின் (23), திருச்சி மாவட்டம் இருங்களூர் கலிங்கப்பட்டியான் தெருவை சேர்ந்த சேகர் மகன் டைட்டஸ் (22), ஆகியோர் சென்றனர். இதில், டைட்டஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் பலத்த காயமடந்தனர்.

மதுரையில் இருந்து சென்ற இன்னோவா காரில் பயணித்த, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் இனியசெல்வன் (33), மற்றொரு இன்னோவா காரில், சபரி மலையில் இருந்து சென்னை சென்ற காரில், சென்னையை சேர்ந்த, செல்வராணி (68), அருள்ராஜ், வந்தனர். காரை சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த மனோகர் (43) ஓட்டி வந்தார். இதே போல திண்டுக்கல் மாவட்டம் குஜ்ஜிலியம்பாறையில் இருந்து மேல்மருவத்தூருக்கு 23 ஆண்கள், பெண் ஒருவர், ஒரு சிறுவன், 2 சிறுமிகள் என டிரைவர் உள்பட 28 பேர் வேனில் வந்தனர்.

மேலும், 3 கார்கள், ஒரு வேன், மற்றும் பைக்கில் வந்தவர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் விபத்து மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கயிவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து மற்றும் மீட்பு பணிகளால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விலைமதிப்பற்ற உயிர்களை சாலையில் பலியாவதை தடுக்க வாகன ஓட்டிகள் உரிய ஓய்வு எடுப்பதோடு, அவசரம் இல்லாமல் கவனமாக வாகனத்தை உரிய வேகத்தில் இயக்கினால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியம். ஒருவர் செய்யும் தவறு பலரை பாதிக்கிறது என்பது இச்சம்பவம் ஓர் உதாரணம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!