Near Perambalur, a person who was asking for a lift on a bike was hit by a car and died!

பெரம்பலூர் அருகே நேற்றிரவு பைக்கும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் பைக்கில் லிப்ட் கேட்டு வந்தவர் பலியானார். ஓட்டி வந்தவர் படுகாயமடைந்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியப்பா ரெட்டி மகன் பழனி (55) இவர். பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் செயல்படும் தனியார் டயர் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக அதே தொழிற்சாலையில் லோடுமேனாக பணிபுரியும் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாசாமி மகன் மனோஜ் (30) என்பவருடன் லிப்ட் கேட்டு, அவரது பைக்கில் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பெரம்பலூரில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சாலை ஓரத்தில் வந்துக் கொண்டிருந்த மனோஜ், பழனி இருவரும் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் காயமடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனியை மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!