Near Perambalur, a woman was threatened with a knife, her cell phone stolen, gold jewelry stolen!
பெரம்பலூர் அருகே புதுநடுவலூரை சேர்ந்தவர் சுதா (34) சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டைட்டீசியனாக பணி புரிந்து வருகிறார். இன்று மாலை பணி முடித்து தனக்கு ஸ்கூட்டியில் சிறுவாச்சூர் – புதுவேலூர் சாலையில் செல்லும் பொழுது, அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் வந்து சுதாவின் வாகனத்தை மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினையும், 1 1/2 பவுன் செயினையும், செல்போனையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.