Near Perambalur Rs. 2.50 lakhs worth of jewelery and money stolen!
பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி மகாலட்சுமி (60). இன்று காலை 11.00 மணி அளவில் ரேஷன் கடையில் பொருள் வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
ரேசன் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு மதியம் 1 மணி அளவில் திரும்ப வந்த பார்த்த போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் படை பிரிவை வரவழைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தங்க செயின் 3 1/2பவுன், கழுத்து செயின் 1 பவுன், மோதிரம் 1/2 பவுன், மோதிரம் 1/4 பவுன், தோடு 1/4 பவுன், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் என கொள்ளையர்கள் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,