Near Perambalur, Rs. 53 lakh confiscated!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 53 லட்சத்தை இன்று பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் – துறையூர் சாலையில் பாளையம் பேருந்து நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த அலுவலர் பழனிச்செல்வம் தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூரில் இருந்து குரும்பலூருக்கு சென்ற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற வங்கி வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.53 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அதனை குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்ஸியிடம் ஒப்படைத்தனர்.