Near Perambalur, people who went to eat in hotels broke the rear window of their cars and looted goods worth Rs. 10 lakh!

பெரம்பலூர் அருகே ஹோட்டல்கள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் மகேஷ்பாபு (32),.பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு மகன் ரமேஷ்(38), விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் ஜோஸப் கமல்(32), திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் துளசிராமன் மகன் ஸ்ரீராமுலு(37). புகைப்பட கலைஞர்களான இவர்கள் 4 பேரும் நேற்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் புகைப்படங்கள் எடுத்துவிட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேற்றிரவு பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில், காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றனர். பின்னர், திரும்பி வந்து கார் ஏற முயன்றபோது காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் காரில் வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 கேமராக்கள், 5 லென்ஸ்கள், ஒரு மடிக்கணினி, 2 ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த பீர்முகமது (54), இவரது மனைவி சமீமா பானு, திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவராக உள்ளார். இவர் சொந்த வேலையாக சென்னை சென்றுவிட்டு நேற்றிரவு திருச்சிக்கு வந்தனர். வரும்வழியில் இரவு 10 மணியளவில் பெரம்பலூர் கல்பாடி பிரிவு ரோடு பகுதியில் உள்ள ஹோட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர்.

சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து காரில் ஏற முயற்சித்தபோது மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து காரில் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம், ஆதார், பான், ஏடிஎம் கார்டுகள், ஓட்டுநர் உரிமம், மருத்துவ கவுன்சில் அடையாள அட்டை ஆகியவற்றை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!