Near Perambalur, the police gathered because of information that a ruling party official was showing a black flag by reprimanding the minister, union secretary and an officer who asked for more commission!

பெரம்பலூர் அருகே அமைச்சர், ஒன்றிய செயலாளர் மற்றும் அதிக கமிசன் கேட்ட அதிகாரியை கண்டித்து, ஆளும்கட்சி பிரமுகர் கருப்பு கொடி காட்டுவதாக வந்த தகவலால் புஜங்கராயநல்லூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஒன்றியத்தில் இன்று திட்டப் பணிகள் தொடக்க விழா , நிறைவுற்ற பணிகள் திறப்பு விழாக்கள் இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்க சென்றார்

ஆலத்தூர் ஒன்றிய செயலாளராக இருக்கும் கொளக்காநத்தம் என்.கிருஷ்ணமூர்த்திக்கும், புஜங்கராயநல்லூரை சேர்ந்த ஒன்றிய செயலாளரின் முன்னாள் ஆதரவாளருமான காட்டுராஜாவிற்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டடு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என திமுக தலைமையில் மனு கொடுத்தனர்.

அதற்கு முன்பாக தனது மனைவியும், மாவட்ட கவுன்சிலருமான அருள்செல்வியுடன் காட்டுராஜா, ஆலத்தூர் யூனியன் அலுவலகத்தில், மண் தரையில் அமர்ந்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அரசின் ஒப்ப பணிகளுக்கு 4.5 சதம் முதல் 20 வரை சதம் வரை கூடுதல் கமிசன் கேட்டு, பில் போடாமல் இருப்பதற்கு முக்கியமாக நகைக் கடையின் பெயரை கொண்ட பெண் அதிகாரியை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புஜங்கராயநல்லூருக்கு அரசு நிகழ்ச்சிக்கு வந்த ஒன்றிய சேர்மனும், ஒன்றிய செயலாளருமான ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்திக்கு காட்டுராஜா அவரது ஆதரவாளர்களுடன் கருப்பு கொடி காட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிரன்ஸ்பர் வந்தும் பெண் அதிகாரி அவரது சமூகத்தை அமைச்சரின் ஆதரவில் தொடந்து தற்போது பெரம்பலூரில் பணியாற்றி வருகிறார். இந்த அதிகாரியை கண்டித்தும், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கண்டித்தும் திமுக பிரமுகர் காட்டுராஜா கருப்பு கொடி காட்டலாம் என போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காட்டுராஜாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்யாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னம் காவல் நிலையத்திற்கு இன்று காலையிலேயே அழைத்து சென்றனர்.

மேலும், காட்டுராஜாவின் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டாமல் இருக்க புஜங்கராயநல்லூரில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் இன்று எவரும் அமைச்சர் வந்ததால் கருப்பு கொடி காட்டவில்லை. அமைச்சரும், நகைக்கடையின் பெயரை கொண்ட அதிகாரியும் வந்து செல்லும் வரை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சரும், அந்த அதிகாரியும் சென்ற பின்னர் அந்த ஊரில் போலீசார் பாதுகாப்பை விலக்கி கொண்டு, காட்டுராஜாவையும் விடுவித்தனர்.

தற்போது ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் திமுகவினரிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவத்தால் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!