Near Perambalur, there is no direct bus facility to another exam writing center, so the students went with difficulty!

பெரம்பலூர் மாவட்டம், தாலுகா தலைமையிடமான வேப்பந்தட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். பதினோராம் வகுப்பபில் 91மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பில் 90 மாணவர்களும் படித்து வருகின்றனர். இதில் +1மாணவர்களுக்கு எசணையிலும் +2மாணவர்களுக்கு அன்னமங்கலத்திலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேப்பந்தைட்டையில் இருந்து அன்னமங்கலம் செல்வதற்கு நேரடி பேருந்துவசதி இல்லை என்பதால், தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அவ்வழியே செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டும், சில மாணவர்கள் சொந்த பைக்குகளிலும், சென்று தேர்வு மையத்தை அடைந்தனர். மேலும், எதுவும் கிடைக்காத பட்சத்தில் நடந்தே சென்றனர். இதனால் தங்களுக்கு உடற்சோர்வு, மனச்சோர்வு ஏற்படுவதாக மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.

தாங்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைத்து தந்தால் சிரமிம் இன்றி தேர்வு எழுத வசதியாய் இருக்கும் என்றும், மாணவர்கள் தெரிவித்தனர். ஒருசில மாணவர்கள் ஆபத்தை உணராமல் மூன்று மூன்று பேராக பைக்குகளில் தேர்வுக்கு சென்றனர். இது தொடர்பாக வேப்பந்தட்டை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது வேப்பந்தட்டை அரசுமேல்பள்ளியிலேயே தேர்வுமையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் தபால் கொடுத்துவிட்டோம் என்றும் தெரிவித்தார்.

முழுக்க முழுக்க கிராமப்புற மாணவர்கள் பயிலும் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கவேண்டும் என்பது தேர்வு எழும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வலுத்துள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கீழக்கணவாய் கிராமத்தில், அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, விடுதி தொடக்க விழா கலந்து கொண்டார்.

அவரிடம், செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, பேருந்து வசதி செய்யப்படாத நிலை குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடமும், முதன்மை கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளோம். மேலும், வரும் ஆண்டு வேப்பந்தட்டையில் தேர்வு அமைக்க பெரமபலூர் எம்.எல்.ஏ, மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்வு முடியும் வரை சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்படும் என தெரிவித்தார்.

பெரம்பலூரில் 7.30 மணிக்கு புறப்படும் அரசு பேருந்து வேப்பந்தட்டைக்கு சுமார் 8 மணிக்கு சென்று, அன்னமங்கலம் சென்றடையும், மதியம் 1.40 க்கு அன்னமங்கலத்தில் புறப்படும் பேருந்து வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூரை வந்தடையும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!