New groom shot dead near Perambalur who exposed the issue of liaision!
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் அடுத்த நமையூர் அருகே உள்ள நரியோடை நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அல்லிதுரை மகன் அஜித் (26). கடந்த மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. நேற்றிரவு போதையில் இருந்த அஜித், அதே பகுதியை சேர்ந்த ரஜினி (45), என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாக வெளியில் சொல்லி உள்ளார்.
இதனால், ரஜினிக்கும், அஜித்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ரஜினி வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியால் அஜித்தை சுட்டார். அஜித்திற்கு இடது கண் மற்றும் தலையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டு, துடிதுடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார் , நாட்டு துப்பாக்கியுடன் ரஜினி தலைமறைவாகிவிட்டார். தகாத உறவு இருப்பதாக வெளியே சொன்ன வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.