New Oxygen Plant at Perambalur Government Hospital; MLA, Prabhakaran inspection!

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும், அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவின் தரம் மற்றும் சுவை, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கான உணவு முறை, கோவிட் கேர் சென்டர் ஆகியவற்றை பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர், அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

கொரோனா நோய் தொற்றினை தடுப்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 வெண்டிலேட்டர்கள் அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய சுகாதார பணிகள், நபார்டு மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து ஒரு நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான புதிய திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு உரிய நேரத்தில் உணவு வழங்கிடவும், அவர்களுக்குத் தேவையான சுகாதாரமான குடிநீர் மற்றும் சுத்தமான கழிப்பிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக தொடர்ந்து பராமரித்திட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 660 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,045 நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 3,331 நபர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 42 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 நபர்கள் பெரம்பலூர். அரசு மருத்துவமனையிலும், 336 நபர்கள் பிற மாவட்ட மருத்துவ மனையிலும், 1,221 நபர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என மொத்தம் 1,672 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளும், தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 180 படுக்கைகளும் என மொத்தம் 280 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை, வேப்பூர், கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவமனைகளிலும், கொளக்காநத்தம், அம்மாபாளையம், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு. சாரணர் பயிற்சி பள்ளி, அம்மா, வெங்கடேசன், தனலட்சுமி, அற்புதா, லட்சுமி எஸ்.பி.டி, மது, தேவி, நிரஞ்சன், பெட்ரோ, ராமசாமி, சிவா ஆகிய தனியார் மருத்துவ மனைகளிலும், J.K, பூமணம், மங்கலம் ஆகிய திருமண மண்டபங்களிலும் என 23 இடங்களில் 1,063 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை மருத்துவ மனை, கிருஷ்ணாபுரம் மருத்துவமனை, வேப்பூர் அரசு மருத்துவ மனை, காரை அரசு மருத்துவ மனை, தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ மனை. அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ‘ஏ’ பிரிவில் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், ‘பி’ பிரிவில் 179 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், ‘சி’ பிரிவில் 21 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், ‘டி’ பிரிவில் 326 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் அரசு மருத்து மனையில் திரவ ஆக்ஸிஜன் கலனும் உள்ளன.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 770 தடுப்பூசிகளும், தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ மனையில் 279 தடுப்பூசிகளும், அம்மாபாளையம் அரசு மருத்துவ மனையில் 570 தடுப்பூசிகளும், ஆலத்தூர் அரசு மருத்துவ மனையில் 560 தடுப்பூசிகளும், வாலிகண்டபுரம் அரசு மருத்துவ மனையில் 440 தடுப்பூசிகளும், லப்பைக்குடிக்காடு அரசு மருத்துவ மனையில் 920 தடுப்பூசிகளும், வேப்பூர் அரசு மருத்துவ மனையில் 50 தடுப்பூசிகளும், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவ மனையில் 70 தடுப்பூசிகளும் மற்றும் கிராமப்புற ககாதார நிலையங்களில் 330 தடுப்பூசிகளும் என மொத்தம் 4.110 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இடங்கள், பொது இடங்கள் மக்கள் அதிதமாக கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கோவிட் 19 கொரோனா நோய் சம்மந்தமாக ஏற்படும் சந்தேகங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு, அறையில் உள்ள 1077, 9154155097 மற்றும் 18004254556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியையும் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்தார். அப்போது, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!