New supermarket building on behalf of cooperatives in Namakkal: Minister Thangamani opened.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள கொண்டிசெட்டிபட்டியில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சூப்பர் மார்க்கெட் மற்றும் கிடங்கு திறப்பு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலமாக நாமக்கல் நகரில் 11 ரேசன் கடைகளும், திருச்செங்கோடு நகரில் 4 ரேசன் கடைகளும், மோகனூர் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் தலா 2 கூட்டுறவு மருந்துக்கடைகளும், நாமக்கல் உழவர்சந்தை எதிரரில் பொது விற்பனை பிரிவு கடையும் செயல்பட்டு வருகிறது.
இப்பண்டகசாலை மூலமாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து ரேசன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பண்டக சாலை மூலம் நாமக்கல் மோகனூர் ரோட்டில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சுயசேவைப்பிரிவுடன் புதிய சூப்பர் மார்க்கெட் கட்டிடம் மற்றும் குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்.பி. சுந்தரம், எம்எல்ஏ பாஸ்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பாலமுருகன், அரசு வக்கீல் தனசேகரன், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் காளியப்பன், வீட்டு வசதி சங்கத்தலைவர் விஜய்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.