New vegetable procurement market; Entrepreneur’s initiative for farmers: Perambalur officials explain about subsidy, profit!

சொந்த ஊர் விவசாயிகள் வாழ்வாதரத்தை உயர்த்த, பெரம்பலூர் அவ்வூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதிதாக காய்கறி கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சி பின்தங்கிய பகுதியாக உள்ளது. அந்த ஊரில் போக்குவரத்தும், கொள்முதல் சந்தையும் இல்லாததால், விவசாயிகள் மரவள்ளி, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். சில நேரங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது கடுமையாக பாதிப்படைகின்றனர். இது குறித்து அந்த ஊரை பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமாரிடம் தெரிவித்தனர்.

தன்னைப் போல, தன் ஊர் மக்களும் வளமாக வாழவேண்டும் என்பதற்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்புக்காக 13 கோடி ரூபாய் வழங்கி வரும் நிலையில், தற்போது, பின்தங்கிய பகுதியை சேர்ந்த பூலாம்பாடி, அரசரடிக்காடு, வேப்படி பாலக்காடு, மேலக்குணங்குடி கடம்பூர், பெரியம்மாபாளையம், கள்ளப்பட்டி, உடும்பியம், அரும்பாவூர், மலையாளப்பட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் விவசாயத்தை முக்கிய தொழிலாகவும், கறவை மாடு மூலம் பால் உற்பத்தி செய்வதை உபதொழிலாகவும் செய்து வருகின்றனர்.

அவர்களின் வாழ்வை, வயலில் இருந்துதான் உயர்த்த முடியும் என்பதை முடிவு செய்த டத்தோ.பிரகதீஸ்குமார், ஒட்டன்சத்திரம், தலைவாசல் போன்று காய்கறி கொள்முதல் சந்தை அமைக்க கடந்த சில மாதங்களாக முயற்சி எடுத்து வருகிறார்.

அதன் பகுதியாக, 2ம் கட்டமாக, நேற்று சேலம், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவாசயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை, மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், மத்திய அரசு கேவிகே மற்றும் வங்கி அதிகாரிகள் அரசு சார்பில் கிடைக்கும் மானியம் மற்றும், காய்கறி சாகுபடியால் கிடைக்கும் ஆதாயங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும், விவசாயிகளிடம் அக்ரி அதிகாரிகள், எப்படி பயிரிடவேண்டும், எப்போது பயிரிட வேண்டும், என்ன பயிரிட வேண்டும் என எடுத்துரைத்தனர். அதோடு, ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் விவசாயம் எப்படி செய்து லாபம் ஈட்டுகிறார்கள் என தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் டத்தோ. பிரகதீஸ்குமார் தெரிவித்ததாவது:

விவசாயிகள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில், எந்த பிரதிபலனும் பார்க்காமல், செய்கிறோம். இந்த புதிய பூலாம்பாடி காய்கறி கொள்முதல் சந்தையில் இருந்து மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், திருச்சி, சென்னை, கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், தலைவாசல் போன்ற உள்நாட்டு வியாபார சந்தைகளுக்கு அனுப்ப முயற்சி செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை அனுப்புவதன் மூலம் கூடுதலாக லாபமடைவார்கள்.

எங்களது நிறுவனம் மூலம் 3 அக்ரிகளும், அரசு மானியம் உள்ளிட்ட அரசு துறை உதவிகளை பெற ஒரு அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் விவசாயிகளை வழிநடத்தி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒற்றுமை இல்லாத உழவர்களை ஒன்றிணைத்து, அவர்களை தொழில் முனைவோர்களாகவும், அவர்களது உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, நல்ல வருவாய் ஈட்டி வாழ்வு செம்மை எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என தெரிவித்தார்.

இதில், 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பூலாம்பாடி நாட்டார் ராமராஜ், ரோவர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் தலைமை விஞ்ஞானி நேதாஜி மாரியப்பன், கால்நடைத்துறை மருத்துவர் ஜீவா, வேளாண்மை வணிகம் சத்தியா, அக்ரி மாரிமுத்து, அக்ரி நவநீதகிருஷ்ணன், எஸ்பிஐ வங்கிஅதிகாரிகள், ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் டத்தோ பிரதீஸ்குமார் நற்பணி மன்றத்தினர் உள்பட பல விவாசய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!