New Year 2022: Aswins’ 8th Annual Cake Festival Starts from today!

பெரம்பலூரில் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில் கேக் திருவிழா நேற்று துவங்கியது.

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் அன்ட் ஸ்வீட் பேக்கரி நிறுவனம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் மாபெரும் கேக்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் அமைந்துள்ள அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் 8 வது ஆண்டாக கேக் திருவிழா இன்று காலை தொடங்கியது.

விழாவிற்கு அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை வகித்து கேக் திருவிழாவை திறந்து வைத்தார். அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர்கள் செல்வகுமாரி, அஸ்வின், நிஷா, சிபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளலார் அரவிந்தன் முதல் விற்பனையை தொடங்கி வைக்க அதனை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன செயலாளர் விவேகானந்தன் பெற்றுகொண்டார்.

இதில் கரோனா விழிப்புணர்வு கேக்குகள், துாய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கேக்குகள் மற்றும் சாக்கோடிரபுல், ரெட்வெல்வெட், ரிச்ப்ளம் கேக், மோல்டு கேக், ஸ்டாபெர்ரி, நெய்கேக், கோதுமை கேக், பீட்ரூட்கேக், பிளாக்கரண்ட்கேக், சாக்லெட்கேக், மெல்டிஸ்கேக். பிளாக்பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ஜாக்கோரபுல், ரெயின்போ, நெட்வெல்வெட், புளுபெரி, ஸ்டாபெரி, பட்டர்ஸ்காச், பிளாக்கன்னெட், ஜாக்லெட், வெண்ணிலா, ஹனிகேக் டரிச்பிளைன்கேக், மோல்ட்டு, பொக்கே, பிளைன் கேக் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான கேக்குகள், மல்டி கலரில் பல்வேறு வகையான கேக்குகள் கண்காட்சியில் இடம்பெற்றிந்தன. இக்கண்காட்சி நாளையும், நாளை மறுநாள் (1ம்தேதி) வரை நடைபெறுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!