No police on any bus for security the day after it started, Perambalur Police’s (Payanam) trip plan failed!

Model


பெரம்பலூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கென பயணம் என்ற புதிய திட்டத்தை நேற்று பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ச. ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்தார்!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பேருந்தில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் போது ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாக அவர்களின் கல்வி பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர்கள் திருமண வயதை அடையும் முன்னரே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்நிலை ஏற்படாமல் இருக்கவும் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் மேற்கொள்ளும் பயணம் மிகவும் பாதுகாப்பானது என்று அவர்கள் உணரும் நிலையை இத்திட்டம் ஏற்படுத்தும் என்றும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து புறப்படும் ஒவ்வொரு பேருந்திலும் ஒரு சப் – இன்பெக்டர் மற்றும் 2 போலீசார் பயணிப்பார்கள் என்றும், ஒவ்வொரு பேருந்திலும் காவல்துறையினர் சாதாரண உடையில் பொதுமக்களுடன் பொதுமக்களாக சேர்ந்து பயணம் மேற்கொள்வார்கள் என்றும், பிரச்சனை செய்பவர்கள் மீது உடனடியான காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி நேற்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.

ஆனால், இன்று காலை பெரம்பலூரில் புறப்பட்ட பேருந்துகளில் காவல் துறையை எவரும், சீருடையிலோ, அல்லது சாதாரண உடையில் கூட செல்லவில்லை. அலுவல் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போலீசார் வாரண்ட் இல்லாமல் சென்றனர் என நடத்துனர்கள் தெரிவித்தனர். பெரம்பலூர் அரசு டெப்போவில் மட்டும் சுமார் 93க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது இல்லாமல் தனியார் பேருந்துகள், மினிபஸ்களும் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே, போலீஸ் பற்றாக்குறையால் அவதிப்படும் போலீசார் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு, விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல சொந்த குடும்ப பணிகளை மேற்கொள்ள முடியாமலும் சிரமம் அடைகின்றனர்.

பெரம்பலூர் அரசு பேருந்துகளில் போலீசார் பயணிக்க வேண்டும் என்றால் கூட 93 பேருந்துகளுக்கு மாவட்ட எல்லை வரை சென்று வரக்கூட சுமார் 50 க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், தலா 2 போலீசார் என வைத்துக் கொண்டால் 100 பேர் என மொத்தம் 150 பேர் பணிபுரிய வேண்டும். மாவட்ட எல்லையில் இறங்கி சாதாரண உடையில் நிற்கும் போலீசாரை அடையாளம் கண்டு பேருந்து ஓட்டுனர்கள் ஏற்றி வருவது என்பது மிகவும் சிரமம்.

இன்று பெரம்பலூரில் இருந்து சென்ற எந்த பேருந்துகளிலும், போலீசார் பயணிக்காததால், நேற்று தொடங்கிய இத்திட்டம் இன்றே தோல்வியை தழுவியது என்றே கூறலாம், வெறும் விளம்பரத்திற்காக இத்திட்டம் தொடங்கப்கட்டுள்ளதா என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!