Not absconding, the false cases foisted on me by law to deal with: Puratchi Bharatha Perambalur District President R.Vellaiyan notice

r-vellain
புரட்சி பாரத கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஆர். வெள்ளையன் விடுத்துள்ள அறிவிப்பு :

கடந்த சட்ட மன்ற தேர்தலில், புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கூட்டணி கட்சியான அதிமுக கட்சியின் வேட்பாளர்களான பெரம்பலூர் எம்.எல்.ஏ. இரா.தமிழ்ச்செல்வன், மற்றும், குன்னம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.இராச்சந்திரன் ஆகியோரின் வெற்றிக்காக கட்சியின் உத்திரவின் பேரில் கடுமையாக உழைத்து உள்ளோம்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் இது நாள் வரை என் மீது வழக்குகளிலும், சம்மந்தப்படவில்லை, மேலும், குற்ற பிண்ணனி பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளேன்.

சி.ஆர்.ஐ.ஓ.பி எண்: 32179 ( 2014 ) ல் இதுவரை அரசு தரப்பில் பதில் அளிக்காமல் காலம் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 19.08.2016 அன்று எனது மனைவி, வீட்டில் இருந்த போது, 50 காவலர்களுக்கு மேல் நான் இல்லாத போது என்னை பிடிக்க எனது வீட்டிற்கு வந்துள்ளார்கள், இது குறித்து, நான், உடனே பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு சென்றேன். அங்கு ஆய்வாளர் இல்லை, மற்ற அதிகாரிகளிடம் கேட்டேன். யாரும் எனக்கு சரியான முறையில் பதில் கூறவில்லை. இது குறித்து எனது கட்சி தலைவரிடம் முறையிட்டேன். அவர் சென்னைக்கு வரக் கூறியதன் பேரில் சென்னை சென்று விட்டேன்.

கடந்த ஆக.24 தேதியன்று காவல் துறை அதிகாரி ஐ.ஜி.யிடம் நேரில் சென்று மனு கொடுத்துள்ளேன். ஆக.26 ம் தேதி, முதமைச்சர் தனிப்பிரிவுகளிலும் நேரில் சென்று புகார் கொடுத்தேன். ஆக.26 அன்று ஏ.டி.டிஜி.பி பாரதியை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன், ஆனால், கடந்த செப். 2 மற்றும் 3 தேதியில் பொய்யான செய்தியை வெளியிட்டு, எனது வளர்ச்சியை பிடிக்காமல், எனக்கு இருக்கும் நற்பெயரை, சீர்குலைக்கவும், என்னை ஒழித்து கட்டவும், சில அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் தான் முக்கிய காரணம் என தெரியவந்தது.

மேலும், நான் தலைமறைவாக இல்லை, எனவே, என் மீது போடப்பட்ட பொய்யாக வழக்குகளை நான் சட்டப்படி சந்தித்து வருகிறேன். இதன் மூலம், எனது சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும், என்னால் இயன்ற உதவிகளையும், எனது அரசியல் வாழ்க்கையின் செயல்படுத்தி வருகிறேன், என அவரது அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!