Notice to stop water supply in Perambalur Municipality!
பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் ராமர் விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் நகராட்சிக்கு, குடிநீர் வினியோகம் செய்யும், கொள்ளிடம் குடிநீர் திட்டத்திற்கான தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து, வருவதால் 03.10.2023 முதல் 06.10.2023 முடிய 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 03.10.2023 முதல் 06.10.2023 முடிய நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியதம சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.