Nurse dies after attempting suicide in Perambalur
பெரம்பலூர் நகராட்சிக்குடட்பட்ட விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்(45), விஜயலட்சுமி(41), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், நர்ஸ்சாக வேலை பார்த்து வந்த விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த விஜயலட்சுமி கடந்த 03.10.2019ந்தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று அதிகாலை சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
இதுகுறித்து, விஜயலட்சுமியின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அருண்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.