Nutrition Management Training on Vegetable Crops: Namakkal Agricultural Science Center
நாமக்கல்லில் காய்கறிப்பயிர்களில் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 22ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு காய்கறிப்பயிர்களில் சாகுபடி குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் மண் மற்றும் நீர் பரிசோதனை அவசியம், சாகுபடி குறிப்புகள், ஊட்டச்சத்து மேலாண்மை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும். மேலும் மண் மற்றும் நீர் மாதிரி சேகரிக்கும் முறைகள், விதை நேர்த்திப்பற்றிய செயல் விளக்கமும் காண்பிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.