Nutrition workers seeking full-time state employees picket

சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மாதாந்திர ஓய்வூதியம் 3 ஆயிரத்து 500ரூபாய் வழங்க கோரியும் , சத்துணவு ஊழியர்களை முழுநேரஅரசு ஊழியர்களாக அறிவிக்க கோரியும் , காலமுறை ஊதியம் வழங்க கோரியும் ,10 வருடம் 20 வருடம் பணி முடித்தவர்களுக்கு அரசு அறிவித்த நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று இரண்டாவது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்க்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார்.

மாவட்டத்லைவர் செல்லப்பிள்ளை கோரிக்கைகளை விளக்கி பேசினார். பின்னர், சத்துணவு ஊழியர்கள் அனைவரும் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் 22 ஆண்கள் உட்பட 227 பேர் ஈடுபட்டனர். போலீஸார் கைது செய்து போராட்டக்காரர்களை வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!